தென்காசி அருகே திருமணமான புதுப்பெண் முன்னால் காதலனுடன் மாயம்

தென்காசி: தென்காசி அருகே திருமணமான புதுப்பெண் கணவர் வெளிநாடு சென்ற மறுநாள் முன்னால் காதலனுடன் மாயமானார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள மேல்கடையநல்லூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணான தேன்மொழி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவர் ஜெயக்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில் மனைவி தேன்மொழி தனது காதலனுடன் வீட்டில் இருந்து மாயமானார். தேன்மொழியை உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் பெண்ணின் உறவினர்கள் கடையநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: