டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுபாஷ் சந்திரபோஸுக்கு 30 அடியில் சிலை

புதுடெல்லி: இந்திய சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திரபோஷின் தியாகத்தை போற்றும் வகையிலும், அவரின் 125வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள பழைய அமர் ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள விதானத்தின் கீழ் 30 அடி உயர சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்ற சிற்பி சுபாஷ் சந்திரபோஷின் 30 அடி உயர சிலையை செதுக்கி உள்ளார்.

இந்த சிலையை செய்வதற்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கருப்பு நிற  ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  சிலையின் வடிவமைப்பை ஒன்றிய கலாசார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நவீன கலை  அருங்காட்சியகம் (நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்) குழுவினர் செய்துள்ளனர்.  இதற்கான பணிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க ஒன்றிய அரசால்  திட்டமிடப்பட்டுள்ளது. சிற்பி அருண் யோகிராஜ், கேதார்நாத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை செதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: