×

கொடைக்கானலில் கோடை விழா நாளையுடன் நிறைவு: படகு, துடுப்பு போட்டியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 24ம் தேதி தொடங்கிய கோடை விழா, நாளை  முடிவடைகிறது. இதையொட்டி, கொடைக்கானல் ஏரியில் நேற்று படகு போட்டி நடந்தது. இது 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. பெடல் படகு பிரிவில் இரட்டையர் பெடல் போட்டி, நால்வர் பெடல் போட்டிகள் நடந்தன. இதில், 60 பேர் கலந்து கொண்டனர். இரட்டையர் பெடல் போட்டியில் மயிலாடுதுறை ஜீவிகா, ரமேஷ் முதலிடத்தையும், திருவாரூர் செல்வி, உதயா 2ம் இடத்தையும், புவனேஸ்வரி, சந்தோஷ்குமார் 3ம் இடத்தையும் பிடித்தனர்.

நால்வர் பெடல் போட்டியில் கொடைக்கானல் ரித்திக், உதயா, சாந்தம்மாள், செல்வி குழுவினர் முதல் பரிசையும், தென்காசி ஐயன் கண்ணு, அபி, சஞ்சீவ் ராவ், மணிகண்டன் குழுவினர் 2வது பரிசையும், முத்துக்குமார், முத்துராமன், யுவராஜ், சுவாதி குழுவினர் 3வது பரிசையும் வென்றனர். பின்னர் நடந்த துடுப்பு படகு போட்டியில் வனபாண்டி முதலிடத்தையும், தாவூத் இப்ராஹீம் 2வது இடத்தையும், பெலிக்ஸ் ராஜ்குமார் 3வது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து நடந்த விழாவிற்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை சுற்றுலா துறையினர் செய்திருந்தனர்.

Tags : Summer Festival ,Kodaikanal , Kodaikanal, summer festival, boat, paddle competition, tourists
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்