×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் நம்பர் 1 ஜோகோவிச்சை வீழ்த்திய நடால்: 4.12 மணி நேரம் நடந்த மாரத்தான் ஆட்டம்

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில்ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நடப்பு சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான செர்பியாவின் ஜோகோவிச்(35), 5ம் நிலைவீரரும் 13 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான  ஸ்பெயினின் ரபேல் நடால்(35) பலப்பரீட்சை நடத்தினர். 15ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடந்தது. விறுவிறுப்புடன் நடந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6-2 என 49 நிமிடத்தில் எளிதாக கைப்பற்றினார். ஒன்றரை மணி நேரம் நீடித்த 2வது செட்டில் கடும்போட்டி நிலவிய நிலையில் ஜோகோவிச் 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

3வது செட்டில் அதிரடி காட்டிய நடால் 6-2 என தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 4வது செட் உண்மையான ஹார்ட்ஸ்டாப்பராக அமைந்தது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்தசெட்டை நடால்  7(7)-6(4) கைவசப்படுத்தினார். முடிவில் 6-2 4-6 6-2 7-6 (7-4)எனவெற்றிபெற்ற நடால் அரையிறுதிக்கு தகுதிபெற்றார். மொத்தம் 4 மணி நேரம் 12 நிமிடம் இந்த ஆட்டம் நடந்தது.

வெற்றிக்கு  பின்னர் நடால் கூறுகையில்,நோவாக்கிற்கு எதிராக வெற்றி பெற ஒரே ஒரு வழி உள்ளது: முதல் புள்ளியில் இருந்து கடைசி வரை சிறப்பாக விளையாடுவது. இன்று எனக்கு அந்த இரவுகளில் ஒன்று நான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்கு அன்பை காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்றார்.  முன்னதாக நடந்த மற்றொரு கால் இறுதியில் 3ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்(25), 19 வயது 6ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் மோதினர். இதில் 6-4, 6-4, 4-6, 7(9)-6(7) என்ற செட் கணக்கில், ஸ்வெரேவ் வெற்றி பெற்றார். நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் நடால்-ஸ்வெரேவ் மோதுகின்றனர்.

இன்று மாலை  நடைபெறும் மகளிர் ஒற்றையர் கால்இறுதியில், ரஷ்யா வீராங்கனைகள் வெரோனிகா- டாரியா கசட்கினா, போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசினா பெகுலா மோதுகின்றனர். நேற்று நடந்த கால் இறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப், 7-5,6-2 என சகநாட்டைச் சேர்ந்த ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தினார். அரையிறுதியில் அவர் இத்தாலியின் மார்டினா டிரெவிசானை எதிர்கொள்கிறார்.

சிறந்த வீரரிடம் தோற்றேன்
ஜோகோவிச் கூறுகையில், “கடைசி ஷாட் வரை போராடியதற்காக நான்  பெருமைப்படுகிறேன். நான் சொன்னது போல், இன்று நான் ஒரு சிறந்த வீரரிடம்  தோற்றேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவற்றைப் பயன்படுத்தவில்லை. நான்கு  மணி நேரப் போராட்டத்தில் இந்த தோல்வியை நான் ஏற்க வேண்டும். நடால் ஏன் ஒரு  சிறந்த சாம்பியன் என்பதை காட்டினார்,அவர் அதற்கு தகுதியானவர் என்பதில்  சந்தேகமில்லை, என்றார்.

நடால் vs ஜோகோவிச்
* டென்னிஸ் முன்னணி வீரர்களான ஜோகோவிச்-நடால் நேற்றுடன் சேர்த்து இதுவரை 59 முறை மோதி உள்ளனர். இதில் 30ல் ஜோகோவிச், 29ல் நடால் வென்றுள்ளனர்.
* களிமண் தரையில் மோதிய போட்டியில் ேமாதியதில் 20-8 என முன்னிலை வகிக்கிறார்.
* பிரெஞ்ச ஓபனில் 10போட்டியில் மோதியதில் 8-2 என நடால் முன்னிலை வகிக்கிறார். ஆனால் பிரெஞ்ச் ஓபனில் 2 முறை நடாலை வீழ்த்திய ஒரே வீரர் ஜோகோவிச் தான்.
* நடால் 21, ஜோகோவிச் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளனர். தற்போது நடால் 22வது முறையாக பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags : Nadal ,Djokovic ,French Open ,Marathon , French Open Tennis, Djokovic, Nadal, 4.12 Hours Marathon
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!