கறம்பக்குடி அருகே ஆபத்தை ஏற்படுத்தும் பழமை வாய்ந்த பள்ளி கட்டிம்: இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாழமை வாய்ந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் கருவட தெரு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கன்னியான் கொள்ளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அதனை சுற்றியுள்ள மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்துள்ளது. தற்போது அந்த பழமையான பள்ளி கட்டிடத்திற்கு அருகில் புதிய தொடக்க பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் விளையாட்டு நேரங்களில் பழமை வாய்ந்த இடிந்த பழுதடைந்த பள்ளி கட்டிடம் அருகே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த நேரமும் பழைய கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலையிலும் ஆபத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலையிலும் உள்ளதால் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.மிகுந்த மன உளைச்சலுடன் காணப்படுகின்றனர். சில நேரங்களில் விளையாட முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் பள்ளிக்கு இறுதி ஆண்டு விடுமுறை விடப்பட்டிடுப்பதால் எதிர்காலத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் பெற்றோர்கள் பொது மக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையிலும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் அரசும் ஊராட்சியும் தலையிட்டு பழமை வாய்ந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: