×

பின்னணி பாடகர் கே.கே.மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு...இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை என தகவல்

கொல்கத்தா: பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது. பாடகர் கே.கே என்கின்ற கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் இறந்ததாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாடகர்  கிருஷ்ணகுமார் குன்னத் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டு தமிழ், இந்தி உட்பட பல்வேறு முக்கிய மொழித் திரைப்படங்களில் பல நூறு பாடல்களை பாடியுள்ளார். இதனால் அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவருடைய திடீர் மறைவுக்கு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது கொல்கத்தால் போலீசார் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மரணம் இயற்கைக்கு மாறானது என கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கிருஷ்ணகுமார் குன்னத் தங்கியிருந்த ஓட்டலின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் உயிரிழந்த கிருஷ்ணகுமார் குன்னத் உடல் இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kolkata police ,KK Karan , Kolkata police file case against playback singer KK for unnatural death
× RELATED மே.வங்கத்தில் பள்ளி ஆசிரியர் நியமன...