×

நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதியாண்டில் 8.7% ஆக உயர்வு!!

டெல்லி : நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதியாண்டில் 8.7% ஆக உயர்ந்துள்ளதாகவும் கடந்த மார்ச் காலாண்டில் 4.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் 4.1% ஆக அதிகரித்ததை அடுத்து கடந்த நிதியாண்டின் வளர்ச்சி 8.7% ஆக உயர்ந்து உள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் -6.6%ஆக இருந்தது. இருப்பினும் இதற்கு முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் வளர்ச்சி 5.4% ஆக உயர்ந்து இருந்தது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் 2வது கணக்கில் கடந்த நிதியாண்டில் வளர்ச்சி 8.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்து இருந்தது. இதனிடையே நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த ஏப்ரலில் 8.4% ஆக உயர்வை கண்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 62.6% அதிகமாகும். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி 4.9% இருந்தது. 8 முக்கிய துறைகளில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஏப்ரலில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முந்தைய ஆண்டில் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : GDP, GDP, growth
× RELATED ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை...