பொருளாதாரத்தை சிறப்பாக கையாண்டது யார்? பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா?

டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி அரசை காட்டிலும் தனிப்பெரும்பாமையுடன் ஆட்சி புரியும் பிரதமர் மோடி அரசு ஜிஎஸ்டி செயலாக்கம் போன்ற துணிச்சலான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் புள்ளி விவரங்களை நோக்கும் போது பொருளாதாரத்தை மன்மோகன் அரசே சிறப்பாக கையாண்டது தெரிய வந்துள்ளது. 2004 முதல் 2014 வரையிலான மன்மோகன் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 7.5% - 8% வரை இருந்துள்ளது. உலக பொருளாதாரம் ஆட்டம் கண்ட 2008ம் ஆண்டில் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி சற்று குறைந்துள்ளது.

2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து வளர்ச்சி கொண்ட பொருளாதாரம் 2014ம் ஆண்டு மோடி பதவியேற்ற பின்னரும் ஏறுமுகத்திலேயே இருந்தது. ஆனால் 2016 பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறு, நடுத்தர தொழில்களை நசுங்கி போனதால் ஜிடிபியும் கடுமையாக சரிந்தது. கொரோனா முடக்கத்தால் 2020 - 21ல் ஜிடிபி எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது. 2020ல் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோர் 43%. 2004ல் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோர் 54%க்கும் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை திறம்பட செயல்படுத்தப்படவில்லை. 100 நாள் திட்டத்தின் சுணக்கமும் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கியக் காரணம் ஆகும்.

மோடி அரசின் முதல் சில ஆண்டுகளில் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பேரிடர், உக்ரைன் - ரஷ்யா போர் பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வும் பணவீக்கம் எகிற காரணமாகும். 2014ம் ஆண்டில் ஒன்றிய அரசின் கடன் 55 லட்சம் கோடி ரூபாய இருந்தது. 2022ம் ஆண்டில் கடன் மதிப்பு 135 லட்சம் கோடியாக பெருகிவிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிகக்கைக்கு பிறகு நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து உயர்தது. 2021 - 22 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 6.9% ஆக அதிகரித்தது.

மோடி அரசின் மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக கருதப்படும் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு மாறாக எதிர்மறை விளைவுகளையே ஏற்பத்தினை என்பது தெரிய வந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் லட்சக்காக்கணக்கானோர் வேலையிழக்க காரணமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது கருப்பு பண ஒழிப்பு, ரொக்க பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது, கள்ள ரூபாய் நோட்டுகளை அளித்து ஒழிப்பது போன்ற எந்த ஒரு இலக்கையும் எட்டவில்லை என்பது மாபெரும் சோகம்.

Related Stories: