சமூக வலைத்தளங்களில் பாஜவுக்கு ஆதரவாக பதிவிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் எஸ்பி அதிரடி

திண்டுக்கல்: சமூக வலைத்தளங்களில் பாஜ மற்றும் இந்துத்துவா ஆதரவு கருத்துகளை பதிவிட்ட போலீஸ்காரரை, திண்டுக்கல் எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர்  சுரேஷ். இவர், பாஜ மற்றும் இந்துத்வாவுக்கு ஆதரவான கருத்துகளை, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். மேலும், மற்ற கட்சியினர் குறித்து அவதூறாகவும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சுரேஷின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் பாஜவுக்கு ஆதரவாகவும், மற்ற கட்சியினர் குறித்து அவதூறாகவும் பதிவிட்டது தெரிய வந்தது. அரசுப் பணியில் இருப்பவர்கள் கட்சி, மதங்களை சாராமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனவே, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன், சுரேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Related Stories: