×

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் கூடாது: போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2016ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 1998 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலையில், 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டது பாரபட்சமானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், கடந்த 2016 முதல் 2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது. 2016க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் அந்த அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

Tags : Seventh Pay Commission ,ICC ,Transport Corporation , No discrimination in payment of pensions as recommended by the Seventh Pay Commission: ICC orders Transport Corporation
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பஸ்,...