மீண்டும் படம் இயக்குகிறார் கங்கனா

மும்பை: தனது படங்களின் தொடர் தோல்விகள் காரணமாக, மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் கங்கனா ரனவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் கங்கனா நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் தக்காட் இந்தி படம் வெளியானது. ரூ.100 கோடி வியாபாரமான இந்த படம், வெறும் ரூ.3 கோடிதான் வசூலித்தது. வரலாறு காணாத இந்த தோல்வியில் துவண்டு போயிருக்கிறார் கங்கனா. ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தில் கங்கனா நடித்திருந்தார். அந்த படத்தை அவரே இயக்கவும் செய்தார். அப்படம் நல்ல வசூலை ஈட்டியது. அந்த வகையில் இனி தான் நடிக்கும் படத்தை தானே இயக்கலாம் என கங்கனா முடிவு செய்துள்ளாராம். அதன்படி எமர்ஜென்சி பெயரில் புதிய படத்தில் கங்கனா நடித்து, இயக்குகிறார். இதில் இந்திரா காந்தியாக அவர் நடிக்கிறார். கங்கனா, பாஜ ஆதரவாளர் என்பதால், இந்த படத்தில் இந்திரா காந்தியை கடுமையாக விமர்சித்து படத்தை உருவாக்க உள்ளாராம். இதனால் இந்த படத்துக்கு பாஜவின் ஆதரவு கிடைக்கும் என்றும் கங்கனா நம்புகிறார்.

Related Stories: