நேபாள விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

காத்மண்ட்: விபத்துக்குள்ளான நேபாள விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். நேபாளத்தில் பொகாராவில் இருந்து ஞாயிறன்று ஜோம்சாம் விமான நிலையத்திற்கு தாரா ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. 22 பேர் பயணித்த இந்த விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் 22 பேரும் உயிரிழந்தனர். நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் அடங்கிய குழு விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கடைசி சடலத்தை மீட்பு குழுவினர் கண்டறிந்து மீட்டனர். ஏற்கனவே மீட்கப்பட்ட 10 சடலங்கள் மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று மீதமுள்ள 12 சடலங்களும் காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே தீவிர தேடுதலுக்கு பின் கருப்பு பெட்டியை குழுவினர் மீட்டு, ஆய்வுக்காக காத்மாண்டுக்கு அனுப்பி உள்ளனர்.

Related Stories: