×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் டிரெவிசான்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இத்தாலி வீராங்கனை மார்டினா டிரெவிசான் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசுடன் (19 வயது, 18வது ரேங்க்) நேற்று மோதிய டிரெவிசான் (28 வயது, 59வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் லெய்லா கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் அபாரமாக விளையாடிய லெய்லா 7-6 (7-3) என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் லெய்லாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த டிரெவிசான் 6-2, 6-7 (3-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். சாரா எர்ரானிக்குப் பிறகு (2013) பிரெஞ்ச் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற பெருமை டிரெவிசானுக்கு கிடைத்துள்ளது.

* சபாட்டினி - டுல்கோ உற்சாகம்
முன்னாள் நட்சத்திரங்களுக்கான ‘லெஜண்ட்ஸ்’ மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் கேப்ரியலா சபாட்டினி - ஜிசெலா டுல்கோ இணை 6-3, 6-3 என நேர் செட்களில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட் - மேரி ஜோ பெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Tags : Travison ,French Open , Travison at the semifinals of the French Open tennis
× RELATED பிரெஞ்ச் ஓபன் பைனல்; பரபரப்பான...