×

சம்பவாத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு; உத்தரகாண்ட் முதல்வர் பதவியில் நீடிப்பாரா? ஜூன் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை

டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வர் போட்டியிட்டுள்ள சம்பவாத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வரும் ஜூன் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் அவர் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக சம்பவாத் தொகுதி பாஜக எம்எல்ஏ  கைலாஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சம்பவாத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். வரும் ஜூன் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Sambhavad ,Uttarakhand ,Chief Minister , Voting in Sambhavad constituency is brisk; Will Uttarakhand Chief Minister continue in office? Counting of votes on June 3rd
× RELATED லக்னோ மக்களவைத் தொகுதியில்...