மேட்டுப்பாளையத்தில் இருந்து உடுமலை வழியாக சென்னை, திருச்செந்தூருக்கு இணைப்பு ரயில்: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

உடுமலை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து உடுமலை, பழனி வழியாக திருநெல்வேலிக்கு தற்போது  கோடை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில்,  திண்டுக்கல், திருச்சி மார்க்கமாக சென்னை எழும்பூருக்கு செல்லும் வகையில், தனி பெட்டிகள் இணைக்க வேண்டும். இதேபோல், விருதுநகரில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் வகையிலும் தனி பெட்டிகள் இணைக்க வேண்டும். இதன்மூலம், கோயில் நகரங்களுக்கு செல்பவர்களுக்கும், ஊட்டி சுற்றுலா செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: