வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தும்பேரி அடுத்த மந்திவட்டம் பகுதிக்கு, காப்புக்காடு பகுதியில் இருந்து குடிநீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் ஒன்று விவசாய விளை நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தீயணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட மான், வனத்துறையினரால் மாதகடப்பா காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

Related Stories: