உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடம்!!

டெல்லி : உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. வலிமையான விமானப்படையை கொண்டுள்ள நாடுகளை ஆய்வு செய்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இந்திய விமானப்படை சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் விமானப்படைகளை பின்னுக்கு தள்ளியது. 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா 242.9 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114. 2 புள்ளிகளுடன் 2ம் இடத்தையும் இந்தியா 69. 4 புள்ளிகளுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய விமானப்படை 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி நிறுவப்பட்டது. இந்திய விமானப்படை 1950ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் 4 முறை போரில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது. இந்திய  விமானப்படையின் மூத்த தளபதியாக குடியரசு தலைவர் விளங்குகிறார். நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது, மீட்புப் பணிகளிலும் விமானப்படை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 1645 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. விமானப்படையில் 1,70,576 பேர் பணிபுரிகின்றனர்.   

Related Stories: