×

ரூ. 34 லட்சம் மோசடி .. பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் : வங்கிக்கணக்கை முடக்கவும் நடவடிக்கை!!

சென்னை : கோவில் புனரமைப்பு பணிக்காக என்று கூறி ரூ. 34 லட்சம் நன்கொடை வசூல் செய்து மோசடி செய்த வழக்கில் நேற்று கைதான யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை ஆவடியில் உள்ள சாபித் தெருவைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் கோபிநாத் பாஜகவின் தீவிர ஆதரவாளர். யூ-டியூபர் ஆன இவர் பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலை புனரமைக்க போவதாக கூறி ரூ. 34 லட்சம் வசூலித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாடுகளில் இருந்தும் பண நன்கொடை வேட்டை நடத்தி தனது சொந்த கணக்கிற்கு மாற்றிக் கொண்டார் என்பது புகாராகும். நேற்று கைதான கார்த்திக் கோபிநாத் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சொந்த வங்கிக் கணக்கிலும் ரூ.6 லட்சம் வசூலித்ததால் அது குறித்து விசாரிக்கவும் வெளிநாடுகளில் இருந்து யார் யாரிடம் வசூல் வேட்டை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்க ஆவடி குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இவரது 2 தனி வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து கணக்குகளையும் முடக்கி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

அனுமதி பெறாத மிலாப் என்ற செயலி மூலமாக நன்கொடை வசூலித்த கோபிநாத் மீது கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளதால் அவர் மீதான வழக்கில் மேலும் சில முக்கிய பிரிவுகள் சேர்க்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீசார் மனு தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

Tags : BJP ,Karthik Gopinath , Fraud, BJP, supporter, Karthik, police
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு