அமெரிக்காவில் 2 சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலி; 4 பேர் படுகாயம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2 சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் ராணுவத்தில் பணியாற்றி உயிர்நீத்த ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை நினைவு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அங்குள்ள Wilmington ஆற்றில் படகு சவாரி செய்து விடுமுறையை கொண்டாடினர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர் எதிர் திசையில் பயணம் செய்த 2 படகுகள் திடீரென நேருக்கு நேர் மோதின.

இதில் 2 படகுகளும் ஆற்றில் கவிழ்ந்து மூழ்கின. 2 படகுகளிலும் பயணம் செய்த 9 பேர் நீரில் மூழ்கினர். அமெரிக்க கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டரை பயன்படுத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இதனிடையே இந்த கோர விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 5 பேரில் 4 பேர் ஒரேய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.இந்த கோர விபத்து தொடர்பாக படகு ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யபட்டார்.

Related Stories: