பீமா ரத்னா பாலிசி: எல்ஐசி அறிமுகம்

சென்னை: எல்ஐசி நிறுவனம், பீமா ரத்னா என்ற புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பீமா ரத்னா என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை கடந்த 27ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லாதது. சேமிப்பு, பாதுகாப்பு இரண்டையும் வழங்கும் ஒரு திட்டமாகும். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் என்ற பாலிசி காலத்தை விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் பாலிசி காலத்தில் கடைசி 2 ஆண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையில் 25 சதவீதம் வழங்கப்படும். முதிர்வு பெறும்போது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை கிடைக்கும்.

பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால் அடிப்படை உத்தரவாத தொகையை விட 125 சதவீதம் அல்லது ஆண்டு பிரிமியத்தை விட 7 மடங்கு, அதாவது, செலுத்தப்பட்ட மொத்த பிரீமிய தொகையில்  வரி கூடுதல் பிரீமியங்கள் நீங்கலாக 105 சதவீதத்துக்கு குறையாமல் வழங்கப்படும். குறைந்த பட்ச உத்தரவாத தொகை ரூ.5 லட்சம். இருப்பினும் ரூ.25,000ன் மடங்குகளாக அதிகரித்துக் கொள்ளலாம். பாலிசி காலத்தில் நிதியுதவி தேவைப்பட்டால் கடனாக பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு எல்ஐசி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: