×

டாக்டர் விஜயலட்சுமிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: மீன்களை சுத்தம் செய்து கிடைத்த வருவாய் மூலம் தன் மகளை டாக்டருக்கு படிக்க வைத்த ராஜாரமணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜாரமணி (46). மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து வாடிக்கையாளர்களுக்கு தரும் வேலையை செய்து வந்தார். இவரது மகள் விஜயலட்சுமி (24). இவர், பிளஸ் 2வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில்  2014ல் மருத்துவ கல்லூரிக்கான கட்ஆப் மார்க் 180க்கு 170 மட்டுமே  இருந்ததால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபோல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டொனேஷன் இல்லாமல் ரூ.7லட்சம் செலவில் மருத்துவ படிப்பில் விஜயலட்சுமியை சேர்த்தார். இதற்காக தான் வாங்கிய வீட்டை விற்று மகளுக்காக செலவு செய்தார். 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து தேர்விலும் வெற்றிபெற்று விஜயலட்சுமி மருத்துவராக திரும்பினார். இந்திய மருத்துவ கழகத்தில் பதிவு செய்வதற்காக எக்சிட் என்ற தேர்வு எழுதவேண்டும். இதற்காக இரவு பகல் பாராமல் படித்து வருகிறேன். வரும் ஜூன் மாதம் அந்த தேர்வு நடக்கிறது என விஜயலட்சுமி தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்களின் உயர் கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடி தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி’’ என்று கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Dr. ,Vijayalakshmi , Chief Minister congratulates Dr. Vijayalakshmi
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...