ராம் சரணை பார்க்க 264 கி.மீ நடந்து வந்த ரசிகர்

ஐதராபாத்: ராம் சரணை பார்ப்பதற்காக 264 கி.மீ தூரம் நடந்தே வந்திருக்கிறார் ரசிகர் ஒருவர்.ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஜெயராஜ் என்ற வாலிபர், சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரணின் தீவிர ரசிகர். ராம் சரணை சந்திப்பதற்காக தனது ஊரிலிருந்து கால்நடையாக ஜெயராஜ் நடக்க ஆரம்பித்தார். 4 நாட்கள் நடந்து, 264 கி.மீ தூரத்தை கடந்து அவர் ராம் சரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தகவல் அறிந்து ராம் சரண் அவரை வீட்டுக்குள் அழைத்து நலம் விசாரித்தார்.

அப்போது, தனது வயலில் விளைந்த நெல்கள் மூலம் ராம் சரணின் முகத்தை புகைப்படமாக வரைந்து கொண்டு வந்திருந்தார் ஜெயராஜ். அதை ராம்சரணிடம் வழங்கினார். அதற்கு நன்றி தெரிவித்த ராம்சரண், தனக்காக இதுபோல் சிரத்தை எடுத்து நடந்து வர வேண்டாம் என அந்த ரசிகரை கேட்டுக்கொண்டார். ஜெயராஜுடன் ராம்சரண் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

Related Stories: