கடும் எதிர்ப்பால் அக்‌ஷய்குமார் பட தலைப்பு மாற்றம்

மும்பை: கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அக்‌ஷய்குமாரின் இந்தி பட தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.பிருத்விராஜ் என்ற இந்தி படத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பை சாம்ராட் பிருத்விராஜ் அல்லது, மஹராஜ் பிருத்விராஜ் சவுகான் என மாற்றும்படி கர்ணிக் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இல்லாவிட்டால் படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்த படத்துக்கு சாம்ராட் பிருத்விராஜ் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டதன்படி, விளம்பரங்களில் இந்து மகாராஜாவின் வெற்றி கதை என்றும் வாசகம் இடம்பெற செய்துள்ளனர். வரும் 3ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

Related Stories: