×

இன்று இடைத்தேர்தல் உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி தொடர்வாரா?

டேராடூன்: உத்தரகாண்டின் சம்பவாத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தாமி முதல்வராக நீடிக்க முடியும். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் தேதி சம்பவாத் தொகுதி பாஜ எம்எல்ஏ  கைலாஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சம்பவாத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Pushkar Singh Tami ,Uttarakhand ,Chief Minister , By-election today Chief Minister of Uttarakhand Will Pushkar Singh Tami continue?
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்