×

கூடலூர் பைபாஸ் சந்திப்பில் மினி லாரி மோதி ஹைமாஸ் லைட் சேதம்: டிரைவர், கிளீனர் படுகாயம்

கூடலூர்: கூடலூர் தெற்குப் பகுதியில் உள்ள கிரசர் அருகே பைபாஸ் சந்திப்பு உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கம்பத்தில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு குமுளி நோக்கி சென்ற மினிலாரி பைபாஸ் சந்திப்பில், அறிவிப்பு பலகை இல்லாததால் ஹைமாஸ் லைட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் துண்டாக உடைந்த ஹைமாஸ் லைட் அருகில் உள்ள மின் டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில் மினி வேன் டிரைவர் அபினேஷ் (26), கிளீனர் ராகுல் (21) பலத்த காயத்துடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் நகர்ப்புறத்திலிருந்து நெடுஞ்சாலைக்கு சாலை பிரியும் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால் புதியதாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இதேபோல் பல பைபாஸ் சந்திப்புகளில் முறையான எச்சரிக்கை போர்டு இல்லை. இதனால் உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது. எனவே புறவழி பைபாஸ் சந்திப்பு சாலைகளில் நெடுஞ்சாலை துறை சார்பாக எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kudalur , Mini truck collides with Hymas Light at Kudalur bypass junction: driver, cleaner injured
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...