டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது: ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். இந்நிலையில் கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்துடன் ஹவாலா பண பரிவர்த்தனை செய்ததாக சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: