×

மிஸ்டர் ஆசியா போட்டி: 71 வயது முதியவர் சாதனை

மதுராந்தகம்: இமாச்சல பிரசேத்தில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா போட்டியில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர்  சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரை சேர்ந்தவர் மாஸ்டர் ரத்தினம் (71). இவர் மதுராந்தகம் நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். மிஸ்டர் காஞ்சி, மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் ெசளத் இந்தியா மற்றும் மிஸ்டர் இந்தியா ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன் இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோர் மிஸ்டர் ஆசியா போட்டி பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதன்மூலம் ஜூலை 15ம் தேதி மாலத்தீவில் நடைபெறும் மிஸ்டர் ஆசியா போட்டியிலும் அதனைத் தொடர்ந்து டிசம்பர் 5ல் தாய்லாந்தில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியிலும் கலந்துகொள்கிறார்.

Tags : Asia Competition , Mr. Asia Competition: 71-year-old record
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...