×

அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியல்: தோனியை முந்திய ஹர்திக் பாண்டியா

அகமதாபாத்: மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த பிரமாண்ட இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அறிமுக அணியான குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

முதல் அணியாக பிளேஆஃப் மற்றும் இறுதி போட்டிக்குள் நுழைந்த குஜராத் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியலில் தோனியை முந்தியுள்ளார். மும்பை அணி 2015, 2017, 2019 மற்றும் 2020-ம் ஆண்டு கோப்பை வென்ற சமயத்தில் அந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று 15-வது சீசன் ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் 5-வது முறையாக கோப்பையை வென்று தோனியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவை தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்காக கோப்பையை வென்ற அம்பதி ராயுடு-வும் இந்த பட்டியலில் உள்ளார்.

இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6 கோப்பைகளுடன் முதல் இடத்தில் உள்ளார். மும்பை அணிக்காக 5 கோப்பையும், டெக்கான் சார்ஜர்ஸுக்காக ஒருமுறையும் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.  


Tags : IPL ,Hardik Pandya ,Dhoni , List of most frequent IPL trophy winners: Hardik Pandya ahead of Dhoni
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...