×

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தை அதிகாரி தொழில்நுட்ப ஆய்வு

பெரம்பலூர் : கோவை மாவட்ட விதை பரிசேதானை அலுவலர், பெரம்பலூர் மாவட்ட விதை பரிசோதனை நிலையத்தை தொழில்நுட்ப ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்தார்.கோவை மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலர் நிர்மலா நேற்று பெரம்பலூருக்கு வருகை தந்து, மாவட்ட மைய நூலகம் அருகேயுள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான விதைப் பரிசோதனை நிலையத்தை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2021-22ம் ஆண்டு இலக்கு 2,820 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு, 2,837 விதை மாதிரிகள் ஆய்வு செய்து 175 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதையும், 2022-23ம் ஆண்டு இலக்கு 2,800 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு 281 மாதிரிகள் இதுவரை ஆய்வு செய்து 34 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

மேலும் விதைப் பரிசோதனை நிலைய உபகரணங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா எனவும் விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்த தன்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியன இங்கு பரிசோதனைகள் முறையாக ஆய்வு செய்து இப்பகுதி விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விதைகள் கிடைத்திட பகுப்பாய்வு முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.

மேலும் அவர்கூறிய அறிவுரைகள் நடப்பு ஆண்டு மேட் டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் குறுவை ரங்களான ஏ.டி.டீ-43, ஏ.டி.டீ-45, ஏ.டி.டீ-36, ஏ.டி.டீ-53, ஏ.டி.டீ-37, எ.எஸ்.டி-18, எ.எஸ்.டி-16 ஆகிய குறுவை சாகுபடி ரகங்களின் மாதிரிகளை உரியகாலத்தில் ஆய்வு முடிவுகளை வழங்க வேண்டும் எனவும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 80 சதவீத சாகுபடி பரப்பு மானா வாரி பயிரான வீரி ஒட்டு மக்காசோளம் மற்றும் பருத்திப் பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

இதற்காக பயன்படுத்தப்படும் வீரிய ஒட்டு விதைகளின் விவசாயிகள் நேரடியாக வழங்கும் பணி விதை மாதிரிகளுக்கு தலா ரூ.80 கட்டணம் பெற்றுக்கொண்டு எவ்வித காலதாமதமும் இன்றி உரிய காலத்தில் விதைப்பரிசோதனை முடிவுகளை வழங்கிட வேண்டும். நெல், உளுந்து பயறு வகை பயிர்கள், நிலக்கடலை எண் ணை வித்து பயிர்கள் மற்றும் இதர பயிர்களின் விதை மாதிரிகள் தரமானதாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் தயாமதி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Seed ,Perambalur ,Ariyalur District , Perambalur: Coimbatore District Seed Inspection Officer, technical inspection of Perambalur District Seed Testing Station
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...