×

ஊசூர் அடுத்த குருமலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படும்-ஆய்வு செய்த கலெக்டர் உறுதி

அணைக்கட்டு :  அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சி குருமலை பகுதியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொள்ளமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. அதில் நூற்றுகணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். துணை சுகாதார நிலையம் அருகே ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கிடு செய்து, வருவாய் துறைக்கு சொந்தமான இடமும் தேர்வு செய்யபட்டது. இருப்பினும், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினருடன் குருமலைக்கு சென்று புதிதாக போடப்பட்ட தார்சாலை, தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை கட்டிடம், அரசு பள்ளி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, வெள்ளக்கல்மலைக்கு செல்லும் கரடு,முரடான மண்பாதையில் அரை கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அடிவாரத்தில் இருந்து மலைவரை தெருவிளக்குகள் வசதி செய்து தர வேண்டும். குருமலையில் இருந்து வெள்ளக்கல்மலைக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். வெள்ளக்கல்மலைக்கு சாலை வசதி மற்றும் அடியில் இருந்து குருமலை வரை தெருவிளக்கு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஊசூரில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் ஆய்வு செய்து ஒரு நாளைக்கு எத்தளை நெல் மூட்டைகள் வருகிறது. மூட்டைக்கு எவ்வளவு பணம் வழங்கபடுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பிடிஓ வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, வருவாய் ஆய்வாளர் ரஜனிகாந்த், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், விஏஓ சங்கர்தயாளன், ஊராட்சி வார்டு உறுப்பினர் பூங்கொடி சேகர், விவசாய சங்க தலைவர் பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மலையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

குருமலையில் கலெக்டர் ஆய்வு செய்த போது அங்கு மலை கிராம இளைஞர்கள் அதிகளவில் இருந்தனர். இதைப்பார்த்த கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் டிகிரி முடித்துள்ளாதாக கூறி, மலையில் பலர் டிகிரிக்கு மேல் படித்தும் வேலையில்லாமல் உள்ளோம் என்றனர். இதையடுத்து மலையில் 8ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்கள் எத்தனை பேர் என ஒரு பட்டியல் தயாரித்து ஒருவாரம் கழித்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தியுங்கள் உங்கள் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

Tags : Kurumalaya ,Usur , Dam: Kurumalai, Nachchimedu, in the Attiyoor panchayat Kurumalai area next to Uzur under the dam taluka Vellore union
× RELATED சிவநாதபுரம்-அத்தியூர் வரை புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற தார் சாலை