×

பிரேசிலில் வெளுத்து வாங்கிய கனமழை!: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு..நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்..!!

பிரேசில்: பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் வடமேற்கு மாகாணமான பெர்னம்புகோவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக மாறிவிட்டன. மாகாண தலைநகர் ரெசிபிள் வாகனங்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரெசிப் நகரத்தின் புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் மலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்ததில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இதையடுத்து சுற்றுவட்டாரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அல்கோவாஸ் நகரத்தின் பெரும் பகுதியை மார்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Brazil , Brazil, heavy rains, floods, landslides, casualties
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...