×

டி.ராஜேந்தரிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.ராஜேந்தர் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 19ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Tags : Chief Minister ,Stalin ,D. Rajendran , D. Rajendan, Chief Minister Stalin,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...