×

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது: தேர்வுக்குழு அமைப்பு

சென்னை: தமிழக அரசின் செய்திக்குறிப்பு: தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் பெயரில் ‘கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை தலைவராகவும் மற்றும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் மற்றும் இயக்குனரும், நடிகருமான கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு, விருது தொகையான ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Tags : Artist Artist Award, Selection Committee,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...