மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: மக்கள் கூட்டம் அலைமோதல்

அம்பை: மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக  பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் மணிமுத்தாறு அருவியில் வெள்ளமாக கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அருவியில் வெள்ளம் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். கோடை வெயில் தாக்கம் அதிகாித்ததால் ேநற்று  விடுமுறை நாள் என்பதால் மணிமுத்தாறு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ திரண்ட சுற்றுலா பயணிகளால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குடும்பத்துடன் கோடையை கழிக்க கூட்டம், கூட்டமாக வாகனங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிப்பது மட்டுமே மகிழ்ச்சியை தருகிறது, வேறு எந்தவொரு பொழுதுபோக்கு வசதிகளும் இல்லை.  குறிப்பாக குழந்தைகள் விளையாடவோ, குடும்பத்தோடு வருபவர்கள் சாப்பிட டைனிங் ஹால் வசதியோ, உணவகங்களோ இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர், மணிமுத்தாறு அணை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் முட்புதர்களாக காட்சியளிக்கும் பூங்காவை சீரமைத்தால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எனவே இயற்கை சூழலில் உள்ள மணிமுத்தாறு அணை பூங்காவை பராமரிக்க வேண்டும் என  அப்பகுதி வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: