×

கோரக்பூர் நோக்கி பறந்து சென்ற போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல்

மும்பை: கோரக்பூர் நோக்கி சென்ற விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அந்த விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து நேற்று, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கண்ணாடி ஒன்றில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த விமான தொழில்நுட்ப குழுவினர், உடனடியாக விமானத்தை மும்பைக்கு திருப்பிவிடுமாறு விமானியிடம் அறிவுறுத்தினர்.

அதையடுத்து, விமானத்தை மீண்டும் மும்பைக்கு கொண்டு செல்ல தலைமை விமானி முடிவு செய்தார். இதுகுறித்து ஏர் டிராபிக் கன்ட்ரோலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பின்னர் மும்பை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென வீசிய காற்றில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனை விமானி கவனித்தார்.

தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையின் பேரில், ​​விமானம் மீண்டும் மும்பை திருப்பி விடப்பட்டது. விமானியின் எச்சரிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால், விமானத்தின் பாதுகாப்பு குறித்து விமானம் புறப்படுவதற்கு முன்பே பரிசோதிக்கப்பட்டதா? அல்லது விமானம் புறப்பட்ட பிறகு காற்றில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Gorakhpur , Cracks in the windshield of the plane while flying towards Gorakhpur
× RELATED 3 குழந்தைகளுக்கு தாயாக இருந்து கொண்டு...