×

டி.ராஜேந்தரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 19ம் தேதி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி, அவருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தர் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Tags : TD Rajender ,Chief President BSE. ,K. Stalin , Chief Minister MK Stalin's health inquiry to D. Rajendran
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...