ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீவைகுண்ட வல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் பிரமோற்சவ பிரகடன பெருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். இதையொட்டி, இந்தாண்டு த்வஜாரோகணம் எனும் விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீவைகுண்ட பெருமாள், வல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், பூஜைகள் நடந்தன.

இந்நிலையில், 3வது நாளான நேற்று ஸ்ரீவைகுண்ட பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி கருட வாகனத்தில் அமர்ந்து முக்கிய வீதி வழியாக உலாவந்து பக்தர்கள் காட்சியளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தீபாரதனை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து அனுமந்தம், யாழி, யானை, சேஷ, குதிரை வாகனம், சந்திரபிரபை, மோகினி அவதாரம், எடுப்பு தேர், பல்லாக்கு, வெண்ணைத்தாழி, பல்லாக்கு தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், சப்தாவரணம், முதல் நாள் விடையாற்றி உற்சவம், 2வது விடையாற்றி உற்சவம் இறுதியாக புஷ்ப பல்லக்கில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Related Stories: