×

அகத்தீஸ்வரம் கோயில் சிலைகள் கடத்தல் ஒலக்கூர் போலீசில் முன்னாள் ஐஜி புகார்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல் நிலையத்தில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல், பழமை வாய்ந்த சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரில், ஒலக்கூர் கிராமத்தில் அகத்தீஸ்வரம் கோயில் கி.பி 9ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் பேரன் 2ம் ராஜேந்திர தேவன் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த கோயிலில் உள்ள பழமை வாய்ந்த 5 கல் விக்ரகங்கள் 50 ஆண்டுகள் முன்பு வரை பயன்பாட்டில் இருந்ததாகவும், கோயில் அறநிலையத்துறை நிர்வாகிகளால் பாதுகாப்பு கருதி 5 சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், ஆனால் இன்று வரை அந்த 5 சிலைகள் மீண்டும் அந்த ஆலயத்திற்கு ஒப்படைக்கப்படவில்லை.

மேலும் இதில் ஒரு சில சிற்பங்கள் மும்பை வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், அது 70 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : IG ,Olakoor ,Agathiswaram , Agatheeswaram temple idols smuggling, police, Former IG
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு