செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஜூன் 2ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள் செய்துவந்தனர்.

இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கை: ஜூன் 2ம் தேதி தொடங்க இருந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கும். இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

Related Stories: