ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: