×

ஆண்களா?! பெண்களா?!

நன்றி குங்குமம் டாக்டர்

Aberystwyth என்கிற இங்கிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் நார்த் கரோலினா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களிடம் 28 வகையான பகுப்பாய்வுகள் இதற்காக நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் பலவிதமான புகைப்படங்கள் கொடுக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமான சிரிப்பை வரவழைக்கக்கூடிய தலைப்புகள் எழுதச் சொல்லப்பட்டது. பின்னர் இந்தத் தலைப்புகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு நடுவர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பெண்களைவிட ஆண்கள் எழுதியிருந்த கமெண்ட்டுகள் அதிகம் நகைச்சுவை உணர்வோடும், வேடிக்கையாகவும் இருந்தது. இதன் மூலம் ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சராசரியாக 63 சதவிகித ஆண்கள் பெண்களைவிட நகைச்சுவை உணர்வு அதிகமாக உள்ளனர் என்று தெரிய வந்தது. இதுகுறித்து Psychology today இதழிலும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான கில் கிரின்கிராஸ், இதுகுறித்து சில முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். பொதுவாக ஆண்களிடம் அதிகம் நகைச்சுவை உணர்வு இருப்பதாகச் சொல்லப்படுவது இந்த ஆய்விலும் எதிரொலித்திருக்கிறது. இதில் ஆழ்ந்து பார்க்க வேண்டிய சமூக விஷயம் ஒன்று இருக்கிறது. பெண் குழந்தைகள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், அடக்குமுறையுடனும் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தக் கூட பல சந்தர்ப்பங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு மிகுந்த சுதந்திரம் இருக்கிறது. இந்த சமூகச் சூழலும் ஆண்கள் மிகுந்த வேடிக்கை மனோபாவம் கொண்டவர்களாக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். இது ஒரு தனிப்பட்ட ஆய்வுதான். இறுதியான முடிவு அல்ல’ என்றும் கூறியிருக்கிறார்.

தொகுப்பு: வி.ஓவியா

Tags : Ankala ,Girls ,
× RELATED கேரளாவில் தடையை மீறி காலையில்...