வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உலக திறனாளர்களை கண்டறியும் விளையாட்டு போட்டிகள்-காட்பாடியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள உலக திறனாளர்களை கண்டறியும் விளையாட்டு போட்டிகளை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.வேலூர் மாவட்டம் காட்பாடி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேலூர் மாவட்ட தடகள பவுண்டேசன் இணைந்து 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவிலான (வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை) உலக திறனாளர்களை கண்டறியும் விளையாட்டுப்போட்டிகள் நேற்று நடந்தது.

விளையாட்டு போட்டியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்,  குண்டு எறிதல் 4 கிலோ, 10X6 ஷட்டில் ரன்  போன்ற விளையாட்டு போட்டிகளும், பெண்கள் பிரிவில்  50 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல்,  குண்டு எறிதல்  4 கிலோ, 10X6 ஷட்டில் ரன்  போன்ற விளையாட்டு போட்டிகளும் நடந்தன.

இதைத்தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும், மேலும் பங்கு பெற்ற  அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களையும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு இளைஞர் நல அலுவலர் பெரியகருப்பன், முதன்மை நிலை பளுதூக்கும் பயிற்சி மைய மேலாளர் நொய்லின் ஜான் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: