கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!!

கோவை: கோவை வடவள்ளியில் செயல்படும் பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 6 மணி முதலே சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக 40 இடங்களில் ஆனந்தாஸ் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதில் கோவையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.

குறிப்பாக வடவள்ளி, காந்திபுரம், லட்சுமி மில் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள ஆனந்தாஸ் உணவகங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் சுந்தராபுரம், சாய்பாபா காலனி, நீலம்பூரில் உள்ள ஆனந்தாஸ் குழும இனிப்பகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 4 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனந்தாஸ் உணவாக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: