×

ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதாக தகவல்..: லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் தீவிரம்

உக்ரைன்.: ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் தொடங்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைனில், ரஷ்யப் படை வீரர்கள் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ராணுவ வீரர்களைத் தாண்டி பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, உலக நாடுகளிடம் முறையிட்டுவருகிறது

இந்தநிலையில், கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவத்தினரை உக்ரைன் ராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தெறிந்தாக கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைபற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Luhansk ,eastern Ukraine , Russian forces intensify offensive in eastern Ukraine: Intensification of offensive in Luhansk region
× RELATED உக்ரைனில் 2 தளபதிகள், 50 அதிகாரிகள்...