பரந்தூர் ஊராட்சியில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம்  பரந்தூர் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மேல்நிலைப் பள்ளி, இ சேவை மையம், விஏஓ அலுவலகம், கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் மத்திய, மாநில அரசின் திட்ட பணிகள் நடக்கின்றன. இதனை மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

இதில்,  மத்திய அரசின் திட்டங்களின் வீடு கட்டும் திட்டம், அங்கன்வாடி மைய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டபணிகள், அதில் பணியாற்றும் கிராம மக்களை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அமுல்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமாரி, ஊராட்சி மன்ற தலைவர் பலராமன், ஊராட்சி செயலர் கார்த்திக்வேல் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: