டாடா கேபிடல் நிறுவனம் ஆர்த்தி ஸ்கேனில் முதலீடு

சென்னை: டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம், ஆர்த்தி ஸ்கேனில் முதலீடு செய்துள்ளது. டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.216 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்குகிறது. இதற்கான பரிவர்த்தனை சில தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2000ம் ஆண்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வி.கோவிந்தராஜன் என்பவரால் நிறுவப்பட்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 6 முக்கிய நகரங்களில் தனது கிளையை நிறுவியுள்ளது.  மேற்கண்ட முதலீடு குறித்து ஆர்த்தி ஸ்கேன்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோவிந்தராஜன் கூறுகையில், ‘‘டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.  

இது, எங்களது உயர்தரமான ஆய்வக சேவையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க மேலும் உதவியாக இருக்கும்’’ என்றார். டாடா கேபிடல் குரோத் பண்ட் நிர்வாக பங்குதாரர் அகில் அஸ்வதி கூறுகையில், ‘‘ஆய்வக சேவையில் ஆர்த்தி ஸ்கேன் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.

Related Stories: