கடந்த நிதியாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.760 கோடி

சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் கடந்த நிதியாண்டிற்கான (2021-22) வருடாந்திர கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி நேற்று வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:  வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 9% உயர்ந்து ரூ.88,846 கோடியாக அதிகரித்துள்ளது. வைப்பு தொகை 7% உயர்ந்து ரூ.47,690 கோடியாகவும், கடன்கள் கடந்த ஆண்டை விட 11% உயர்ந்து ரூ.41,156 கோடியாகவும் உள்ளது. வங்கியின் மொத்த லாபம் 9 சதவீதம் உயர்ந்து ரூ.1,595 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் வங்கியின் நிகர லாபம் 28 சதவீதம் அதிகரித்து ரூ.760 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற ஆண்டை விட 5% உயர்ந்து ரூ.1,916 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.5,799 கோடியில் இருந்து உயர்ந்து ரூ.6,550 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 4.70% ஆகவும், நிகர வரா கடன் 2.95% ஆகவும் உள்ளது. மூலதன விகிதம் 20.85% ஆக உள்ளது.

மேலும் 2021-22ம் நிதியாண்டில் யுபிஐ 123 மூலம் சாதாரண மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் இணையவசதி இல்லாமலே பண பரிமாற்றம் செய்யும் வசதி, வங்கி கிளையை அணுகாமலேயே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விண்ணப்பங்களை இணையதள வங்கி சேவை மூலம் சமரிப்பிக்கும் வசதி, வங்கி வாயிலாகாவே நேரடியாக கிரடிட் கார்டு வழங்கும் வசதி, வாடிக்கையாளர்கள் மொபைல் வங்கி சேவை மூலம் புதிய நடப்பு கணக்குகளை வீடியோ அழைப்பின் மூலம் சில நிமிடங்களிலேயே துவங்கும் வசதி, காணொலி மூலம் அதற்கான ஆவணைங்களை செயலியின் வீடியோவில் காட்டி சில நிமிடங்களிலேயே வீட்டிலிருந்தே வங்கி கணக்கு துவக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: