அண்ணாமலை விமர்சிப்பது அரைவேக்காட்டுத்தனம்: கே. பாலகிருஷ்ணன் காட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு:  பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக தான் வெட்கப்படுவதாக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. முதலமைச்சரின் உரையினை அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது.

Related Stories: