லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!

லடாக்: லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. 26 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

மேலும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள 19 ராணுவ வீரர்களும் விமானம் மூலம் சண்டிமந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு விபத்திற்கான காரணம் வெளியாகும்.

Related Stories: