மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்கள், நினைவு சின்னங்கள்..!!

சிட்னி: சிட்னி நகரில் நிலவிய அடர்ந்த மூடுபனியால், நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் பனியால் மூடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அதிகாலை கடுமையான மூடுப்பனி நிலவி வருகிறது. இதனால் எதிரே வரும் ஆட்கள், கட்டிடங்கள் கண்ணுக்‍கு புலப்படாத வகையில் பனி படந்துள்ளது. கடும் பனிமூட்டத்தால், சிட்னி நகரில் உள்ள வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டன.

அடர்ந்த மூடுபனியால் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு, ஓட்டுநர்களுக்கு எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாட்டின் வானிலை ஆய்வு மையம் சாலை வானிலை எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.  உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளபட்டுள்ளது. புகை சுவாச மண்டலத்தை எரிச்சலடையச் செய்யலாம், நுரையீரல் நோய் மற்றும் இதய நோய்களை மோசமாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: